search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுட்டெரிக்கும் வெயில்"

    • வெயிலின் வெப்பம் அதிகரித்து மாலை 6 மணி வரை அனல் காற்றின் தாக்கம் நிலவி வருகிறது.
    • இளநீர், நுங்கு, தர்பூசணி மற்றும் பழரசங்கள், குளிர்பானங்களை அருந்தி வருகின்றனர்.

    காங்கயம் :

    அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் திருப்பூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் உக்கிரமாக உள்ளது. மாவட்டத்தின் கிராம பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக சுட்டெரிக்கும் கோடை வெயிலின் உக்கிர தாக்கம் அதிக அளவு ஏற்பட்டு உள்ளது. இதன்படி காலை 7 மணிக்கு மிதமான வெயில் அடிக்க தொடங்கி மதியம் 12 மணிக்கு மேல் வெயிலின் வெப்பம் அதிகரித்து மாலை 6 மணி வரை அனல் காற்றின் தாக்கம் நிலவி வருகிறது. பின்னர் இரவு நேரங்களிலும் வெயிலின் உக்கிர தாக்கத்தினால் வெப்பத்துடன் கூடிய சூடான அனல் காற்று வீசி வருகிறது. இதனால் நகர, கிராம பொதுமக்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், மாணவ, மாணவிகள் மிகவும் பாதிப்பு அடைந்து உள்ளனர். வெயிலின் உக்கிர தாக்கத்தை குறைக்கும் விதமாக இளநீர், நுங்கு, தர்பூசணி மற்றும் இனிப்பு வகை பழரசங்கள், குளிர்பானங்களை அருந்தி வருகின்றனர். மேலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் நகர, சுற்றுப்புற கிராம பகுதிகளில் பல்வேறு வீடுகளில் மின் விசிறிகள், ஏ.சி எந்திரங்கள் பகல், இரவு நேரங்களில் அதிக அளவில் இயங்கி வருகின்றன. இதனால் மின் தேவைகளின் பயன்பாடு அதிகரித்து உள்ளது.

    கோடை முடிந்தும் இளநீர் விற்பனை நடைபெற்று வருகிறது. இதுபற்றி இளநீர் வியாபாரிகள் கூறியதாவது:- பொதுவாக ஆண்டு முழுவதும் இளநீர் விற்பனை இருந்து கொண்டே இருக்கும். இதில் கோடை காலத்தில் இளநீர் விற்பனை நன்கு சூடு பிடித்து விறுவிறுப்பாக விற்பனையாகும். இதன்படி சுட்டெரிக்கும் கோடை வெயில் காலகட்டத்தில் ஒரு இளநீரின் விலை ரூ.40 முதல் ரூ.60 வரை என விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்படும். இந்தநிலையில் இந்த ஆண்டு கடந்த 2 மாதங்களாக சுட்டெரிக்கும் கோடை வெயிலின் உக்கிர தாக்கம் தொடங்கி அதிக அளவில் வெப்பம் வெளியேறி வருகிறது. இதனால் வழக்கத்தை விட இந்த ஆண்டு கடந்த 2 மாதத்திற்கு முன்பே இளநீர் விற்பனை விறுவிறுப்பு அடைந்தது. தற்போது அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் வெப்பத்தின் தாக்கம் உள்ளதால் இளநீர் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒரு சாதாரண இளநீர் ஒன்று ரூ.30-க்கும், செவ்விளநீர் ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். வெயிலின் தாக்கத்தால் மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகளும் பாதிக்கப்படுகின்றன. அவ்வாறு பாதிக்கப்படும் கால்நடைகளை எப்படி கண்டறிவது,எவ்வாறு பாதுகாக்கலாம் என கால்நடை மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதன்படி கால்நடைகளுக்கு ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து முறை சுத்தமான குளிர்ந்த நீர் குடிக்க கொடுக்க வேண்டும். கால்நடை கொட்டகைகளில் உப்புக் கட்டிகளை கட்டி தொங்க விட வேண்டும். அதன் வாயிலாக கால்நடைகளில் தண்ணீர் பருகும் தன்மை அதிகரித்து, உப்பு சம்பந்தமான நோய்கள் வராமல் பாதுகாக்கலாம். மாட்டுக்கொட்டையில் கூரைக்கு மேலே நீர் தெளிப்பான் அமைக்கலாம். கால்நடைகளை காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை, 3மணி முதல் இரவு 7 மணி வரையிலும் மேய்ச்சலுக்கு அனுப்பலாம்.கோடைக்காலங்களில் கால்நடைகளின் தீவன தேவைகளை பூர்த்தி செய்ய மண்ணில்லா நீரியல் பசுந்தீவன உற்பத்தி, அசோலா பசுந்தீவன உற்பத்தி ஆகியவற்றை மேற்கொள்ளலாம்.பருவ காலங்களில் பசுந்தீவனம் அதிகமாக இருக்கும் போது, அவற்றினை ஊறுகாய் தீவனமாக மாற்றி சேமித்து வைத்து கோடையில் உணவாக தரலாம்.

    பொதுவாக கொடிக்காய்புளி, வாகை, வேம்பு, கருவேல், சுபாபுல், மா, பலா, ஆல், அகத்தி, அரசு போன்ற மரங்களின் இலைகளை ஆடுகளுக்கு சிறந்த உணவாகும். கிராமங்களில் அதிகமாக கோடையில் கிடைக்கும் செவ்வேல் மற்றும் கருவேல் உலர் காய்கள் ஆடுகளுக்கு சிறந்த புரதச் சத்து மிக்க உணவாகும். இவ்வாறு அவர் கூறினார். ஒரு ஆடு 8 முதல் 12 லிட்டர் அளவுக்கு தினமும் நீர் அருந்தும். அதிக வெப்பநிலை நிலவுவதால் மேய்ச்சல் பகுதியில் நல்ல சுத்தமான குடிநீர் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.கோழிகளுக்கு உச்சி வெயில் நேரத்தில் தீவனம் அளிக்க கூடாது. இரவிலும், விடியல் காலையிலும், வெயில் குறைந்த நேரங்களில் அதிக தீவனம் எடுக்கும். கோழிகளுக்கு வழக்கத்தை விட அதிகமான இடவசதி அளிக்க வேண்டும்.

    கோழிகளுக்கு குடிநீரில் வைட்டமின், 'சி' மருந்தினை, கோழி ஒன்றுக்கு தலா 10 மி.லி., கிராம் வீதம் கலந்து கொடுத்தால் அயற்சி ஓரளவு குறையும். மேலும் அயற்சி நீக்கும் பி காம்பளக்ஸ் வைட்டமின், குளுக்கோஸ் போன்றவை கலந்து கொடுக்கலாம் என்றனர்.

    • வேலைகளுக்காக பகல் நேரங்களில் வரும் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வருகின்றனர்
    • நகர கிராம நெடுஞ்சாலை ஓரங்களில் மர நிழல்களில் நுங்கு விற்பனை நடைபெற்று வருகிறது

    காங்கயம்

    காங்கயம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே வருவதற்கு அச்சப்பட்டு வீட்டிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பல்வேறு வேலைகளுக்காக பகல் நேரங்களில் வரும் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வருகின்றனர்.வழக்கமாக ஏப்ரல், மே மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும். ஆனால் நடப்பாண்டில் கடந்த மாதம் முதலே வெயில் வாட்டி வதைக்கத் ெதாடங்கியுள்ளது.

    இந்த சூழ்நிலையில் வெப்பத்தை தணித்துக்கொள்ள தண்ணீரையும், நிழல் தரும் மரங்களையும் தேடிச்செல்ல வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அதிக நீர்ச்சத்துள்ள மற்றும் முற்றிலும் கலப்படம் இல்லாத முழுமையான இயற்கை குணம் நிறைந்த, உடல் சூட்டை தணிக்கும் பனை நுங்கை தேடிச்சென்று சாப்பிடுகின்றனர்.அந்தவகையில் தற்போது திருப்பூர் மாவட்டம் காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில் நுங்கு விற்பனை சூடு பிடித்துள்ளது. நகர, கிராம, நெடுஞ்சாலை ஓரங்களில் மர நிழல்களில் நுங்கு விற்பனை நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தற்போது பொதுமக்களிடம் இயற்கை உணவுகள் குறித்த விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நுங்கு விற்பனை சூடு பிடித்துள்ளதாக நுங்கு வியாபாரிகள் தெரிவித்தனர். 3 கண் உள்ள ஒரு நுங்கு ரூ.20 க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் நுங்கை வாங்கிச் சென்றனர்.

    ஆந்திராவில் சுட்டெரிக்கும் வெயில் கொடுமைக்கு மாநிலம் முழுவதும் 12 பேர் பலியாகி உள்ளனர். அதிகபட்சமாக கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
    நகரி:

    ஆந்திராவில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பல மாவட்டங்களில் 110 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்துகிறது. அனல் காற்று வீசுவதால் மக்கள் வெளியே வர முடியவில்லை.

    இதனால் வாகனங்களில் செல்வோர் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். வீட்டுக்குள் வெப்ப காற்று வருவதால் மக்கள் தூங்க முடியவில்லை.

    வெயில் கொடுமைக்கு மாநிலம் முழுவதும் 12 பேர் பலியாகி உள்ளனர். அதிகபட்சமாக கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 6 பேர் உயிரிழந்தனர். விஜயநகரத்தில் 2 பேரும், விசாகப்பட்டினம், மேற்கு கோதாவரி, சித்தூர், கடப்பா மாவட்டங்களில் தலா ஒருவரும் பலியாகினர். மேலும் வெயிலால் பாதிக்கப்பட்ட 340 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    நேற்று அதிகபட்சமாக பிரகாசம் மாவட்டம் பாதிரி பேட்டில் 114.26 டிகிரி வெயில் பதிவானது

    நெல்லூர் வெங்கடகிரியில் 113.36 டிகிரியும், சித்தூர் தொட்டம்பேடு, குண்டூர் மச்சவரத்தில் 113.18 டிகிரியும், கடப்பா மாவட்டத்தில் முட்டனூரில் 113 டிகிரியும் வெயில் கொளுத்தியது.


    மேலும் மற்ற மாவட்டங்களில் 107.6 டிகிரி முதல் 113 டிகிரிவரை பதிவானது. இதனால் ஆந்திரா முழுவதும் வெயில் தாக்கம் உள்ளது.

    இந்த நிலையில் ஆந்திராவில் வருகிற 25-ந்தேதி முதல் 5 நாட்களுக்கு வெப்ப காற்று கடுமையாக வீசும் என்று அம்மாநில வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த சமயத்தில் பல மாவட்டங்களில் 113 டிகிரி முதல் 118.4 டிகிரி வரை வெயில் சுட்டெரிக்கும் என்றும் இதில் தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளான குண்டூர், பிரகாசம் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கும் என்றும் தெரிவித்து உள்ளது.

    அதேபோல இந்திய வானிலை மையமும் வெப்ப காற்று குறித்து எச்சரித்து உள்ளது. 25-ந்தேதி முதல் ராயலசீமாவில் வெப்ப காற்று கடுமையாக இருக்கும் என்று தெரிவித்து உள்ளது.

    காற்றில் ஈரப்பதம் குறைந்ததே வெப்ப காற்று கடுமையாக வீச காரணமாகும்.

    இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

    சுட்டெரிக்கும் வெயிலால் அவதிப்படும் நிலையில் 5 நாட்கள் வெப்ப காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது பொது மக்களை பீதியடைய செய்துள்ளது.
    பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு 15 பேர் பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #HeatstrokeinPakistan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் உள்ள லால் ஷாபாஸ் கலாந்தர் பகுதியில் நடைபெற்ற ஆண்டு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    பாகிஸ்தானில் தற்போது வெயில் சுட்டெரிக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பலர் வெயிலின் தாக்குதலுக்கு ஆளாகினர்.



    சுட்டெரிக்கும் வெயிலின் கொடுமை தாங்காமல் கடந்த நான்கு நாட்களாக 15 பேர் பரிதாபமாக பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மக்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் இதர ஏற்பாடுகள் செய்யாத மாகாண அதிகாரிகளுக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது. #HeatstrokeinPakistan 
    நாகர்கோவிலில் கோடைகாலம் போல இப்போதே வெயில் கொளுத்துவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த மாதம் தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்தது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் அணைகளுக்கு அதிக அளவு நீர்வரத்து இருந்தது. மேலும் குளம் போன்ற நீர்நிலைகளும் பெரும்பாலும் நிரம்பி விட்டன.

    இந்த நிலையில் படிப்படியாக மழை குறைந்து வந்தது. தற்போது கடந்த 10 நாட்களுக்கு மேலாக மாவட்டத்தில் மழை பெய்யாத சூழ்நிலை உள்ளது. மழை குறைந்ததால் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. கடந்த சில நாட்களாக கோடை காலம் போல வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் காலை நேரத்திலேயே உச்சிநேரம் போல வெயில் கொளுத்துகிறது. இன்றும் நாகர்கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

    அதிக வெயில் காரணமாக சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டமும் குறைந்துவிட்டது. அத்தியாவசிய பணிக்காக வெளியில் செல்பவர்கள் குடை பிடித்த படி சென்றனர். மேலும் சாலையோரங்களில் வெப்பத்தை தணிக்கும் வகையில் பழச்சாறு கடைகளும் ஆங்காங்கே உருவாகி உள்ளன. ஆரஞ்சு பழம் மற்றும் மாதுளம் பழச்சாறுகள் அதிகளவு இந்த கடைகளில் விற்கப்படுகிறது. இதே போல கரும்புச்சாறு, குளிர்பான கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. ஆங்காங்கே நுங்குகளும் குவித்து விற்பனை செய்யப்படுகிறது.

    இளநீர் விற்பனையும் அதி அளவு நடைபெறுகிறது. ஒரு இளநீர் சராசரியாக ரூ.40 வரை விற்பனை ஆகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் இளநீரை அதிகம் குடித்து வருகிறார்கள். கோடைகாலம் போல இப்போதே வெயில் கொளுத்துவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

    வெயிலின் தாக்கம் காரணமாக சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியிலும் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்து விட்டது.
    கனடாவில் சுட்டெரிக்கும் வெப்பத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #HeatWave
    டொரண்டோ:

    கனடாவில் கடும் வெப்ப நிலை நீடித்து வருகிறது. இதனால் நாட்டின் மேற்குக் கடலோரப் பகுதி முழுவதும் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. அப்பகுதி மக்கள் கடும் வெப்பத்தாலும், புழுக்கத்தாலும் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். காட்டுத் தீயும் அங்கு கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கிறது.

    மத்திய கனடாவில் அமைந்துள்ள மாண்ட்ரியல் நகரில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த வெயிலுக்கு இதுவரை பலர் பலியாகி உள்ளனர்.

    மேலும், வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க நீச்சல் குளங்களை நீண்ட நேரம் திறந்து வைக்கும்படி  என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில், கனடாவில் சுட்டெரிக்கு வெயிலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 54ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, மாண்ட்ரியல் நகரில் மட்டும் 28 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் சில தினங்களில் இயல்பு நிலை திரும்பி விடும் என கனட நாட்டு சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. #HeatWave
    கனடாவில் நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக மாண்ட்ரியல் நகரில் 6 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #HeatWave
    டொரண்டோ:

    கனடாவில் கடும் வெப்ப நிலை நீடித்து வருகிறது. இதனால் நாட்டின் மேற்குக் கடலோரப் பகுதி முழுவதும் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது.

    அப்பகுதி மக்கள் கடும் வெப்பத்தாலும், புழுக்கத்தாலும் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். காட்டுத் தீயும் அங்கு கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கிறது.

    மத்திய கனடாவில் அமைந்துள்ள மாண்ட்ரியல் நகரில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த வெயிலுக்கு இதுவரை 6 பேர் பலியாகி உள்ளனர்.

    தேவையில்லாமல் யாரும் வெளியில் வரவேண்டாம். மேலும், வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க நீச்சல் குளங்களை நீண்ட நேரம் திறந்து வைக்கும்படி  அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். #HeatWave
    சீனாவில் சுட்டெரிக்கும் வெயிலில் கார் மேலே வைத்து பெண் ஒருவர் மீன் சமைத்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    பீஜிங்:

    சீனாவில் கடும் வெயில் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர் சுட்டெரிக்கும் வெயிலில் கார் மீது மீனை வைத்து வைக்கிறார். நிலவும் கடும் வெயிலினால் மீன் வேகவைக்கப்பட்டது.


    காரில் 4-5 மீன்கள் வைக்கப்படுகின்றன. வெயிலில் அவை வெந்து விடுகின்றன. இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இது போன்று பல இடங்களில் வெயிலில் மக்கள் சமைத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

    40 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் மீன் சமைக்கப்பட்ட சம்பவம் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×